விவசாயிகளுக்கான யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும்

🕔 May 11, 2023

ரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

அத்துடன், விவசாயிகளுக்கு ரிஎஸ்பி உரம் மற்றும் ஏனைய உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

இதன்படி ஹெக்டேயர் ஒன்றுக்கு 20,000 ரூபா பெறுமதியான வவுச்சரும், இரண்டு ஹெக்டேயருக்கு 40,000 ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்