‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது

🕔 May 10, 2023

மூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை பிரதி மேயரான சந்திக அபேரத்ன, முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியத் நிகேஷலரவ இன்று முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவும் அவருடன் வந்த குழுவினரும் தாக்கும் வீடியோ காட்சியொன்று சமூக ஊடகங்களில் பரவியிரந்தது.

தாக்குலுக்கான பியத் நிகேஷல தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ

தொடர்பான செய்தி: ‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்