குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம்
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலவச சோலார் கலங்கள் வழங்கும் திட்டம், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முயற்சியின் மூலம் 500 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சோலார் கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ், 15,000 வீடுகளுக்கு சோலார் கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும்.