மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

🕔 May 2, 2023

லங்கை மின்சார சபையானது மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நரோச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழு கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்