சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் கண்டறியப்பட்டு, 449,979 குடும்பங்கள் – சமுர்த்தி மானியம் பெறுவதிலிருந்து நீக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதில் முறைசாரா தன்மை காணப்படுவதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளில் உள்ளடங்கிய விடயங்கள் மற்றும் சமுர்த்தி திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக லசந்த அழகியவண்ண தலைமையில் கோபா – அண்மையில் (25) நாடாமன்றத்தில் கூடிய போது இது வெளிப்படுத்தப்பட்டது.