ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: முன்னாள் எம்.பி ஸ்ரீ ரங்கா சந்தேக நபர்

🕔 April 29, 2023

னாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, மற்றுமொரு வழக்கில் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீ ரங்காவை – மே மாதம் 03ஆம் திகதி கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில், சாட்சிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கா, தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்