என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

🕔 April 26, 2023

ஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் தன்னை குற்றவாளியாக்கி சிறையிலடைக்க அல்லது தூக்கிலிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தான் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக தான் குறிவைக்கப்படுவது நியாயமற்றது என்று – முன்னாள் ஜனாதிபதி சிறிசேன குறிப்பிட்டார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்ற போதிலும், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்குதல்கள் தொடர்பாக தன்னை ‘சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட’ விரும்புவதாக மைத்திரி குற்றம் சாட்டினார்.

“தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என்ற அவசர தேவை பேராயருக்கு உள்ளது.

உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார்” என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்