ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரான் அலஸ் மேற்படி முழுமையன அறிக்கையின் பிரதியொன்றை கையளித்துள்ளார்.