இலங்கை வரி வருமானம் 216 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிப்பு

🕔 April 25, 2023

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316 பில்லியன் ரூபாவை வரி வருவாயாகப் பெற்றுள்ளதாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 146,565 மில்லியன் ரூபா வரியாக வசூலிக்கப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 316,619 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, இது 216% சாதகமான வளர்ச்சியைக் காட்டுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய வரிக் கொள்கை, நாட்டின் பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் மற்றும் வரி நிர்வாகத்தின் மேம்பட்ட செயல்திறன் போன்ற விஷயங்கள் இந்த சாதகமான வளர்ச்சிக்கான காரணங்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்