கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

🕔 April 24, 2023

கோட்டாபய ராஜபக்ஷ பதவி கவிழ்க்கப்பட்டமை ஒரு சதித்திட்டம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பதவி கவிழ்ப்பு நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்ணன் மகன் நாமல் ராஜபக்ஷ, விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசும் போது இதனைக் குறிப்பிட்டார்.

“நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. எங்கள் சரிவு திட்டமிடப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நான் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், அவர் நல்ல அர்த்தமுள்ள முடிவுகளை எடுத்தார்.

இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நல்ல நோக்கத்துடன் முடிவு எடுத்தார்” என, நாமல் கூறினார்.

“ஒரு விவசாயியின் மகனாக, அவர் தனது முடிவுகளால் விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டரை ஆண்டுகளாக நாடு முடக்கப்பட்ட பின்னர் – கடினமான நேரத்தில் எடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சேவின் கோவிட் தடுப்பூசி திட்டத்தை இதன்போது நாமல் ராஜபக்ஷ பாராட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்