கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம்

🕔 April 24, 2023

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினியால் இறந்ததாக நம்பப்படும் 26 பேரின் சடலங்கள், கென்யாவின் மலிண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

“ஷகாஹோலா காட்டில் மொத்தம் 47 பேர் இறந்துள்ளனர்” என புலனாய்வாளர் ஒருவர் – ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலைவர் போல் மாக்கன்சி என்தெங்கே என்பவரை பின்பற்றுபவர்கள் என்று கருதப்படுகிறது, அவர் “இயேசுவைச் சந்திப்பதற்காக” பட்டினி கிடக்கும்படி கூறியதாக தெரியவருகிறது.

இதேவேளை, அங்கு மோண்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

“இந்த நடவடிக்கையின் முடிவில் நாங்கள் இன்னும் அதிகமான உடல்களை கண்டெடுக்க வாய்ப்புள்ளது” என, சனிக்கிழமையன்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மாலிண்டியின் ஷகாஹோலா வனத்தின் 800 ஏக்கர் கடலோர பகுதி – குற்றம் நடந்த இடமாகஅறிவிக்கப்பட்டுள்ளது என, கென்ய உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது மூளைச்சலவை செய்யப்பட்ட பொதுமக்கள் இவ்வாறு பட்டினியால் இறந்துள்ளதாக பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்