இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

🕔 April 23, 2023

லங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது.

இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியடைவதைக் குறிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர்.

முதல் மூன்று மாதங்களில் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 405,478 ஆக இருந்தது.

இந்த மாதத்தில் வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களாவர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 11,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,593 ஆகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்