பொய்த் தகவல் வழங்கிய மௌலவிக்கு விளக்க மறியல்

🕔 April 22, 2023

க்குரணையிலுள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு பொய்யான தகவலை வழங்கிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

21 வயதுடைய மௌலவி ஒருவரே – பொலிஸாருக்கு மேற்படி பொய்யான தகவலை வழங்கியிருந்தார்.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அக்குரணை பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதோடு, பாதுகாப்பும் பலப்பட்டிருந்தது.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து மேற்படி மௌலவி கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: அக்குரணை பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக, பொய் தகவல் வழங்கிய மௌலவி கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்