ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

🕔 April 19, 2023

ரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர்கள் அடுத்த வாரத்துக்குள் – பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்கு திரும்ப மறுத்தால், அவசர கால நிலைமையின் கீழ், கல்வித்துறை – அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், பிள்ளைகளின் கல்வியை பணயம் வைப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) முற்பகல் நடைபெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்