பொதுஜன பெரமுனவின் உண்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி, புதிய அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார்: சாகல காரியவசம்

🕔 April 17, 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் உண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – புதிய அமைச்சரவையை நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறித்து அண்மையில் வெளியான செய்தி தொடர்பிலேணே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதியின் நியமனத்தைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். இதற்கு அர்த்தம் எங்கள் கோரிக்கை செல்லுபடியாகவில்லை என்பதல்ல” என்று அவர் விளக்கினார்.

தற்போதைய அமைச்சரவையை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு சொந்த காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்த சாகர காரியவசம், நாட்டில் பாரிய சீர்குலைவு ஏற்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புரிந்துகொண்டுள்ளதாகவும், இன்னொரு எதிர்ப்பு போராட்டத்துக்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவைக்கான எங்களின் உண்மையான கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், தற்போதைய நிலைமை மற்றும் ஜனாதிபதியின் முடிவுகளின் பின்னணியில் உள்ள காரணத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்