‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

🕔 April 12, 2023

லங்கையில் சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை’ நிறுவுவது என்ற பெயரில், இலங்கையில் ஊடகங்களை நசுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சஜித் பிரேமதாச வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது – பக்கச்சார்பற்ற தகவல்கள் பொதுமக்களை சென்றடைவதைத் தடுப்பது என்று சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் தங்களுக்குத் தேவையெனக் கருதும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் கூறினார்.

ஊடக சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான உத்தேச சட்டங்களை தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்