எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிப்பு: மோட்டார் சைக்கிள்களுக்கு 07 லீட்டர் வரை வழங்கப்படும்

🕔 April 4, 2023

ரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று நள்ளிரவு தொடக்கம் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீட்டராக வழங்கப்பட்ட எரிபொருள் 08 லீட்டராக வழங்கப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீட்டரில் இருந்து 07 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கு வழங்கப்பட்ட 40 லீட்டர் எரிபொருள் அளவு 60 லீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

கார்களுக்கு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராக எரிபொருள் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து வாகனங்களுக்குமான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்