டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்ப்பு: ஜுன் 06ஆம் திகதி

🕔 April 4, 2023

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கவுள்ளது.

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு, நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடுமாறு கோரி, சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரித்தானிய பிரஜை என்ற அடிப்படையில் டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்