லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது: லாஃப்ஸ் நாளை குறைக்கவுள்ளதாக தெரிவிப்பு

🕔 April 4, 2023

லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலையினை 1005 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும்.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதன்படி அதன் புதிய விலை 1502 ரூபா என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதவிர 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது

லாஃப்ஸ் எப்போது?

இதேவேளை லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க, நாளை நள்ளிரவு முதல் – லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படும் என, அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், எவ்வளவு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.

Comments