லிட்ரோ எரிவாயு விலை, பெருந்தொகையினால் குறைகிறது

🕔 April 3, 2023

லிட்ரோ எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, எரிபொருள்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, எரிவாயுக்கான விலையும் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments