நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க

🕔 April 2, 2023

புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனும பெயரில் இந்தக் கட்சியைக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார.

பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´இந்த தகவலை வெளியிட்டார்.

“வரும் மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும். ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை. மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவர் கூறினார்.

“சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்துக்குப் பதிலாக புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியல் சித்தாந்தம் வேண்டும். அதை மே மாதம் வெளிக்கொணருவோம். அதுவே ´ஜாதிக ஜனரஜ பெரமுன”´ எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Comments