இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 400 கிராம் பொதியின் விலை ரூபாவால் 80 ரூபாவினால் குறைவடையும்.
இதனிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த முட்டைகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை சாலையோரங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற விவசாய பொருட்களை விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.