பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

🕔 March 25, 2023

– அஹமட் –

பொத்துவில் – ரொட்ட பிரதேசத்திலுள்ள ‘ஜெய்கா’ வீட்டுத் திட்டத்தில் – கடந்த சில நாட்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றன.

இங்கு வரும் யானைகள் அங்குள்ள வீடுகள், மதில்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

அரிசி, நெல் போன்றவை இருந்த வீடுகளையே யானைகள் குறிப்பாக உடைத்துள்ளன.

யானைகளிடமிருந்து பாதுகாப்பு பெறும் வகையில், எந்தவித ஏற்பாடுகளும் இப்பகுதியில் இல்லை எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இங்குள்ள மக்கள் தெரியப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

நெல் வயல் பிரதேசத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வாழும் மக்கள் – சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஏழைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments