அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

🕔 January 18, 2016

Dollar - 032லக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர்.

உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, உலகிலுள்ள வறிய மக்களில் அரைவாசித் தொகையினரிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்திலும் பார்க்க அதிக செல்வம், உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ள 62 பேர் வசம் உள்ளதாகவும் மேற்படி தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகிலுள்ள வறிய மக்களில் அரைவாசிப் பேர் என்பது, உலக சனத்தொகையில் 3.6 வீதமாகும்.

இதேவேளை, சுமார் ஏழரை ட்ரில்லியன் டாலர் (07 லட்சத்து 50 ஆயிரம் கோடி டொலர்) மதிப்பிலான செல்வத்தை, உலக செல்வந்தர்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு வெளியே உள்ள  இடங்களில் பதுக்கி வைத்துள்ளதாகவும் அந்தத் தொண்டுநிறுவனம் கூறுகின்றது.

வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகவே, இவ்வாறு இவர்கள் சொத்துக்களைப் பதுக்கி வைப்பதாகவும் அந்த நிறுவனத்தின் அறிக்கை விபரிக்கிறது.

இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டுள்ள செல்வத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி டொலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு, செல்வந்த ஆப்பிரிக்கர்களே சொந்தக்காரர்கள் என்றும் ஒக்ஸ் ஃபாம்  தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் ஆண்டுக்கு 1400 கோடி டொலர் வரி இழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்