உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

🕔 March 7, 2023

ள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீரமானித்துள்ளது.

ஏற்கனவே மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும் நிதி கிடைக்காமை, வாக்குச் சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் உரிய திகதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு நாட் குறித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்