அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

🕔 March 6, 2023

ரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து அரசியலமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாட உள்ளனர்.

இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நிதி ஆணைக்குழு, கொள்வனவு ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Comments