ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு

🕔 February 23, 2023

ஜா – எல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக, வாதிகள் மூவரின் இடத்துக்கு வேறு எவரையும் நியமிக்க தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சி உறுப்புரிமையில் இருந்து தன்னிச்சையான முறையில் நீக்கப்பட்டதாக வாதிகள் முன்வைத்த விடயங்களைக் கவனத்தில் கொண்ட கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு வரும் மார்ச் 09ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் அநீதியான முறையில் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக குற்றம் சாட்டி – சமிக்க ஹர்ஷனி சில்வா, ஹசித் சாமர பரணவிதாரண மற்றும் சுவந்தி பெரேரா ஆகிய மூவர் தனித்தனியாக முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த பதவிகளுக்கு வேறு நபர்களை நியமிக்க கட்சி தயாராகி வருவதாக வாதிகளின் சட்டத்தரணிள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் மேற்படி தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்