உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்

🕔 February 10, 2023

டைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,672 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமானோர் போட்டியிடுகின்றனர். அங்கு வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 7530 என பதிவாகியுள்ளது.

அடுத்து கொழும்பு மாவட்டத்தில் 7177 பேர் போட்டியிடுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஆகக்குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டமாக முல்லைத்தீவு பதவாகியுள்ளது. அங்கு 592 பேர் களமிறங்கியுள்ளனர்.

அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் 726 பேரும், மன்னார் மாவட்டத்தில் 827 பேரும் என, குறைவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்