பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா

🕔 February 3, 2023

லங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர்.

இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்கிரமசிங்க ஆகியோரோ இவ்வாறு தமது ராஜினாமா கடிதத்தை கையளித்ததார்கள்.

அண்மைக்காலமாக ஆட்சியாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடுமான முரண்பாடுகள் உருவாகியிருந்த நிலையில் இவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை ஊடகங்கள் முன்னிலையில் கடுமையான விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்