வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு

🕔 February 1, 2023

ல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பாக அவருக்கு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன.

வசந்தவுக்கு இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நேற்று கொழும்பு பிரதம நீதவானால் விடுவிக்கப்பட்டார்.

இந்தத் தீர்ப்பை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் வசந்தவை விடுவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் வசந்த முதலிகே செய்யவில்லை என கொழும்பு பிரதான நீதவான் மேலும் தெரிவித்தார்.

2022 இல் அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 140 நாட்களுக்கும் மேலாக வசந்த முதலிகே – பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்