கணவர் மஹிந்தவுடன் வந்து, வாக்குமூலமளித்தார் ஷிராந்தி
🕔 June 1, 2015



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலமொன்றினைப் பதிவு செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஷிராந்தி ராஜபக்ஷ சமூகமளிக்காத நிலையில், வெளியிடமொன்றில் வைத்தே – இவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்கு மூலமளிப்பதற்காக – தனது கணவரான மஹிந்த ராஜபக்ஷவுடனேயே, ஷிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்ததாகவும் அறிய முடிகிறது.
ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இயங்கும் ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையின் நிதிக் கையாளுகை தொடர்பில் வாக்கு மூலமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் – முன்னாள் முதற் பெண்மணி ஷராந்தி அழைக்கப்பட்டிருந்தார்.


Comments



