கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ‘செல்பி’யால், கொள்ளையர்கள் சிக்கினர்

🕔 December 8, 2022

ங்கச் சங்கிலியை பறிகொடுத்த பெண் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘செல்பி’யின் அடிப்படையில், கொள்ளையொன்று நடந்து – சில மணி நேரத்தினுள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரின் தங்கச் சங்கிலியொன்றைப் பறித்துச் சென்றனர்.

தனது கழுத்திலிருந்து தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டபோது – பாதிக்கப்பட்ட பெண், ‘செல்பி’யொன்றை எடுத்துள்ளார். பின்னர் அதனைஅப்பகுதியில் உள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.

அந்தப் படத்தின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களையும் கண்டுபிடித்ததாக, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் – ஹோமகாமா போலிஸாருக்கு பின்னர் அறிவித்தனர்.

இரண்டு சந்தேக நபர்களும் பிட்டபன பகுதியில் – மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

10.5 கிராம் ஹெராயின், கொடகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் 90 ஆயிரம் ரூபாவுக்கு அடமானம் வைக்கப்பட்ட பற்றுச்சீட்டு மற்றும் ஒரு ‘ரம்போ’ கத்தி ஆகியவற்றை சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்