எரிவாயு விலை நள்ளிரவு அதிகரிக்கிறது

🕔 December 5, 2022

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (05) நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 4,610 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

05 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 1,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 860 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்