நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்; பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்படவுள்ளது

🕔 January 13, 2016
ASPLiyanage - 0221முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம், பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில்  மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பீகொக் மாளிகை, பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகேவுற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மாளிகையின் நீச்சல் தாடகத்தில் காணப்பட்ட நீரை அகற்றி அதில் மணல் நிரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாவறு மணல் நிரப்பக் காரணம் மஹிந்தவின் தங்கத்தை மறைத்து வைப்பதற்காகவேயாகும் என கடந்த காலங்களில் வதந்திகள் வெளியாகியிருந்தன.

இந்த வதந்தி தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஏ.எஸ்.பி லியனகே கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரைவில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்படும் என்றும், இதன்படி குறித்த நீச்சல் தடாகத்தை பொலிஸார் சோதனையிட முடியும் எனவும் லியனகே கூறியுள்ளார்.

இதேவேளை, ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய குறித்த நீச்சல் தடாகத்தை மஹிந்த மணல் கொண்டு நிரப்பியதாக முன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சுமார் 75 கோடி ரூபாய் பெறுமதியான பீகொக் மாளிகையை மஹிந்தவிற்கு வழங்க, மேற்படி லியனகே முன்வந்தமை குறித்து, அண்மையில் அவரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்கு மூலம் ஒன்றினைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்