அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான இரண்டு சுற்றறிக்கைகள் ரத்து

🕔 November 30, 2022

ரச துறை ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று (30) அறிவித்துள்ளது.

புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட அமைச்சு, இதற்கு முன்னர் ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு கூறியுள்ளது.

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்கள் சாதாரண மற்றும் பொருத்தமான உடையில் பணிக்கு வருவதற்கு மேற்படி சுற்றறிக்கைகள் அனுமதித்திருந்தன.

Comments