மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை விசாரணையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்த சீ.டி.க்கள் மற்றும் குரல்பதிவுகள் காணாமற் போனமை தொடர்பாகவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிற்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்த அவரிடம், இது தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் விசாரணை தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை