கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

🕔 November 3, 2022

லையில் தாக்கப்பட்டதில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதங்களால் – கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் அண்மையில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மரணித்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

அநுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சார்ஜன்ட் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் இந்தக் குற்றத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என தெரியவந்ததையடுத்து, அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றுமொரு சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்பான செய்தி: பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்