குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையை அறிவிக்க அங்கிகாரம்

🕔 October 11, 2022

லங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி உதவிகள், கடன்கள் மற்றும் சலுகைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும், ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடு, ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும், உலக வங்கியின் சலுகை நிதியைப் பெறுவதற்கு இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இலங்கை தற்போது வளர்ந்து வரும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, கடந்த 2020 ஆம் ஆண்டு – குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற வகைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டில் உயர் நடுத்தர வருமான வகைக்கு உயர்த்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்