இந்த வருடம் ஒன்பது மாதங்களில் 07 லட்சத்துக்கும் மேற்பட்ட கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகத்தெரிவிப்பு

🕔 October 9, 2022
Passport of Sri Lanka on white background

ந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 700,733 கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஓகஸ்டில் அதிகபட்சமாக 115,286 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன.

கடவுச்சீட்டைப் பெறுவதற்காக திணைக்களத்திற்குச் செல்லும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2021 இல் 392,032 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த ஆண்டு 240,000 க்கும் அதிகமான நபர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய பதிவு செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (8) நிலவரப்படி 241,034 நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்