நவமணி பத்திரிகை அலுவலகத்தை மர்ம நபர்கள் உடைப்பதற்கு முயற்சி

🕔 January 10, 2016

Navamani - 02
– பாறுக் சிஹான் –

வமணி நாளிதழின் களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அலுவலகம் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத விஷமிகளால் உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கொஹுவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த மர்மநபர்கள் சி.சி.ரி.வி.கமராவின்  இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்துள்ளனர். பூட்டு வலுவாக இருந்த காரணத்தினால் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மர்மநபர் முகத்தை மூடிக்கொண்டு சி.சி.ரி.வி. கமராவின்  இணைப்பை துண்டித்துள்ளதால் ஆள் யாரென்பதை அடையாளம் காணமுடியவில்லை. இதனை பரிசீலித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று கடந்த செப்டெம்பர் 04ஆம் திகதி இரவுநேரத்தில் நவமணி அலுவலகத்துக்கு மர்மநபர்கள் இருவர் ஆயுதங்களுடன் வந்து சி.சி.ரி.வி. கமராவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டிவிட்டு சென்றனர்.

2002ஆம் ஆண்டு இனந்தெரியாத விஷமிகளால் நவமணி அலுவலகம் முற்றாக தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இனவாத பிரசாரங்களுக்கு எதிராக நவமணி பத்திரிகை அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையிலேய நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.Navamani - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்