சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஆலோசகர்களுக்கு பாராட்டு
– எம்.வை. அமீர் –
கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்ககளாகவும் ஆலோசகர்களாகவும் பணிபுரிபவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் இன்று சனிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம். கப்பார் தலைமையில் கல்முனை பொலிஸ் பிரிவின் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ. வாஹிடின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.எல். ரணவீர பிரதம அதிதியாகவும், கல்முனை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேன கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், டொக்டர் கே.எல்.எம். றயீஸ் மற்றும் டாக்டர் ஏ.எல்.பாருக் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.