ஹிருணிகாவுக்கு பிணை
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளைஞர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது, தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை விடுவிக்குமாறு, கொழும்பு நீதவான் நீமன்ற மேலதிக நீதிபதி உத்தரவு வழங்கினார்.
இதேவேளை, எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் ஹிருணிகா ஆஜராக வேண்டுமென்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.