தாஜுத்தீன் கொலை; சி.சி.ரி.வி காட்சிகளை வெளிநாடு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

🕔 January 7, 2016

Thajudeen - 865பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை வெளிநாட்டு, விஷேட நிபுனர்களுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றத்தடுப்பு விசாரணை பிரிவிற்கு, கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி நிசான்த பீரிஸ் இன்று வியாழக்கிழமை இந்த அனுமதியை வழங்கினார்.

இதற்கமைய, விஷேட உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் தொடர்பாக ஒருவாரத்திற்குள் நீதி மன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மேலதிக நீதவான், உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்