சமல் ராஜபக்ஷவுக்கு தலைமைப் பதவி

🕔 January 7, 2016

Chamal Rajapaksa - 086ஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்  நேற்று  புதன்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களாகவும், இணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட 54 பேர் தமது நியமன கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் கடந்த காலங்களில் செயற்பட்ட, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் இணைத் தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்