60 கோடி அரசுடமையானது

🕔 January 7, 2016

முப்பது கோடி ரூபாவிற்கும் அதிகமான தங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் அரசுடமையாக்கப்பட்டதாக சுங்கவரித் திணைக்களம் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போது கைப்பற்றப்பட்ட தங்கங்களே, இவ்வாறு அரசாங்க உடமையாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுப் நாணயங்களும், கடந்த வருடம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டதாகவும் சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

Comments