தாஜுதீன் கொலை விவகாரம்; கொழும்பு பல்கலைக்கழகம் கைவிரிப்பு

🕔 January 5, 2016

Wazeem Thajudeen - 098தாஜுதீன் கொலை விவகாரத்தில், அவர் கொல்லப்படுவதற்கு முன்னர், அவரைப் பின் தொடர்ந்த வாகனத்தையோ அல்லது நபர்களையோ சி.சி.டி.வி காணொளி மூலம் இனங்காண முடியாதுள்ளதாக  கொழும்பு பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தாஜுதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சி.சி.டி.வி காணொளிகள், மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணொளியில் இருந்து தாஜுதீனின் வாகனத்தினையோ அல்லது அதில் இருந்த நபர்களையோ இனங்காண முடியாதுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த காணொளியை தெளிவாக பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்