மரண தண்டனையை ரத்துச் செய்க; இலங்கையிடம் கோரிக்கை

🕔 January 4, 2016
Death penalty - 097லங்கையில் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் மேற்படி கோரிக்கையடங்கிய கடிதத்தினை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.

மனித உரிமையின் அடிப்படையிலும், மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்