உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம்

🕔 January 4, 2016

Kalmunai Zahira - 012
– எம்.வை. அமீர் –


ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர், க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி –  மூன்று பிரிவுகளில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.

கணிதபிரிவில் என்.எம். சாதிர் மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை மாணவனாக பொறியியல் துறைக்குத் தெரிவாகியுள்ளார்.

புதிதாக அரசாங்கத்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் எஸ்.எச்.எம். சஜாத் என்பவர் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையிலைப் பெற்றுள்ளார்.

அதேபோன்று, உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஜே.ரீ. ஹிக்மத் எனும் மாணவரும், அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலைக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இவர்கள், கல்முனை கல்வி வலயத்திற்கும், கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி, பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், மிருக வைத்தியம், விவசாயம், தொழில்நுட்ப பொறியியல், பௌதீக விஞ்ஞானம், கணிணி, கட்டடக்கலை, கலை, வர்த்தக முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம் ஆகிய பிரிவுகளுக்கு மொத்தமாக 150 மாணவர்கள், கல்முனை ஸாஹிரா கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரியில் க. பொ. த. உயர்தர தொழில்நுட்ப பிரிவு கடந்த 2013 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், 2015 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சைக்கு முதன்முதலாக தோற்றிய மாணவர்களில் இருவர், அம்பாறை மாவட்டத்தில் முதன்நிலை பெற்றுள்ளதுடன், 20 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனைத் தொகுதியில், கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் மட்டுமே உயர்தர தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்