மஹிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்தவர், விசாரணைகளுக்காக அழைப்பு

🕔 January 2, 2016

ASPLiyanage - 0221ஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது 75 கோடி ரூபாய் பெறுமதியான மாளிகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்த பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி. லியனகே, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தமையினை அடுத்து, அவர் அலரிமாளிகையை விட்டும் வெளியேறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லியனகே 75 கோடி ரூபாய் மதிப்பிலான தனது ‘பீகொக்’ எனப்படும் மாளிகையினை மஹிந்தவிற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், கொழும்பில் வசிக்கும் பொருட்டு, வீடொன்றைப் பார்க்குமாறு தன்னிடம் மஹிந்த ராஜபக்ஷ உதவி கோரியதாகவும், தனது நண்பரான மஹிந்த இவ்வாறு தன்னிடம்உதவி கோரியமைக்கு இணங்கவே, தனது வீட்டினை அவருக்கு அன்பளிப்பாக வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் லியனகே கூறியிருந்தார்.

எனினும், குறித்த மாளிகையினை மஹிந்த ராஜபக்ஷவுக்க அன்பளிப்பாக வழங்குவதற்கு தனது குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையினால், அந்த வீட்டினை மஹிந்தவுக்கு வழங்கப் போவதில்லை என்று பின்னர் லியனகே குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இதுதொடர்பிலான விசாரணைகளுக்காக நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலை அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ASPLiyanage - 0222

Comments

புதிது பேஸ்புக் பக்கம்