ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர்

🕔 January 2, 2016

Gnanasara thero - 01“ஆடைகளின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்” என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பில் சிறிதேனும் நாட்டுக்குப் பாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அதனை தீவைத்து எரிக்கவும் தயங்க மாட்டோம். அனுமார் வைத்த தீ போன்று நாங்களும் தீவைக்க தயாராக உள்ளோம்.

அதே நேரம் அவ்வாறு நாட்டுக்குப் பாதகமான வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்படுமாக இருந்தால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆடைகள் எதுவும் இன்றி துரத்தியடிக்கவும் தயங்க மாட்டோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்